பொங்கலுக்கு இனாம் வேண்டாம் டாஸ்மாக்கை மூடுங்கள்

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்துடன் சர்க்கரை, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கும் திட்டத்தை இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி தொடங்கி வைத்தார். இதற்கு, பொங்கல் இனாம் 1000 ரூபாய் வேண்டாம். மக்களுக்குத் தீங்கு விளைவித்து குடும்பங்களை அழிக்கும் டாஸ்மாக்கை மூடுங்கள் என மதுரையை சேர்ந்த மது ஒழிப்பிற்கு பலமுறை போராட்டத்தில் ஈடுபட்ட நந்தினி பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.