தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒடிஸா இளைஞருக்கு கரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. எனினும் தண்டுவட மூளை சவ்வு காய்ச்சல் பாதிப்பால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள எம் சுப்பையா புரத்தில் உள்ள தனியார் சூரிய மின்சக்தி நிறுவனத்துக்கு பணியாற்றி வந்த காளி (24) என்பவருக்கு தொடர் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை இரவு சேர்க்கப்பட்டு அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். அவரது ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை காதர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் அவருக்கு கரணம் பாதிப்பு இல்லை என தெரிய வந்ததாகவும் மூளையிலிருந்து தண்டுவடத்திற்கு செல்லும் சவ்வுப் பகுதியில் வைரஸ் பாதிப்பால் காய்ச்சல் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சம் வேண்டாம் முன்னெச்சரிக்கையாக இருப்போம்… !
