தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் 2000 பேருக்கு அரிசி சமையல் தொகுப்பு வழங்கல்

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் 2000 பேருக்கு அரிசி சமையல் தொகுப்பு வழங்கப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜீ, எம்.எல்.ஏ.சண்முகநாதன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செய்திதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் ஆகியோர் கொரானா வைரஸ் தடுப்பு பணி மற்றும் தன்நலம் பாராது களத்தில் பணிபுரிவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்துவருகின்றனர். இன்று ஏப்- 18 காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ அவர்களின் சொந்த நிதியில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணியில் பணி புரியும் தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் 2000 பேருக்கு நபருக்கு அரிசி சமையல் தொகுப்பு 10 கிலோ அரிசி ஒரு கிலோ துவரம் பருப்பு அடங்கிய தொகுப்பு தேவையான 20 டன் அரிசியும் 2 டன் துவரம் பருப்பு தொகுப்பு ஆகியவற்றை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப்நந்தூரி முன்னிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு எம் எல் ஏ.சண்முகநாதன் ஆகியோர் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் இடம் ஒப்படைத்தனர்

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி யில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உதவி பொருட்களை பெற்று சென்றனர்