பார்வையற்றோர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய திமுக இளைஞரணி – தூத்துக்குடி

உலகமெங்கும் பரவி வரும் கொரோனா தொற்று நோய் தமிழகத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தமிழகத்தில் பல ஏழை எளிய மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம் அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் தூத்துக்குடி(கி) ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்(ம)11 வார்டு உறுப்பினர் A.M. ஸ்டாலின் அவர்களின் உதவியோடு தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சிலுவைப்பட்டி பார்வையற்றோர் இல்லத்திற்க்கு தேவையான மளிகை பொருட்கள் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டது.

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், அன்னை வோளங்கன்னிநகர் கிளை செயலாளர் சரவணன், முத்துநகர் கிளை செயலாளர் பிரபாகர் மற்றும் கணேசபுரம் கிளை செயலாளர் பாரதி ராஜா மற்றும் இளைஞரணி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.