குரும்பூரில் நடந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதி 97வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. குரும்பூரில் ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்த விழாவுக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமை வகித்தார். வக்கீல் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார்.
ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அனிரா ராதாகிருஷ்ணன் திமுக கொடியேற்றி வைத்து, மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் மற்றும் அரிசி, காய்கறி, பருப்பு, சாப்பாடு போன்ற நலத்திட்ட உதவிகளை 300 பேருக்கு வழங்கி பேசினார்.
இதில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமாஜெயம், குரும்பூர் நகர செயலாளர் பாலம் ராஜன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளரும், மேலாத்தூர் பஞ்., தலைவருமான சதீஷ்குமார், நல்லூர் பஞ்., துணைத்தலைவர் பரிசமுத்து, ஒன்றிய அவைத்தலைவர் சவுந்ரராஜன், சேதுக்குவாய்த்தான் ஊராட்சி செயலாளர் சோலை நட்டார் உட்பட பலர் கலந்து கொண்டனர்