திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக்குவதற்கு பாடுபட வேண்டும் என திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் கூட்டம் உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்தில் வைத்து நடந்தது. மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமை வகித்தார். மாநில மாணவர் அணி துணைச்செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக்க தீவிரமாக பாடுபடவேண்டும், கிராம சபை கூட்டம் நடத்திய ஸ்டாலின் மீது பொய் வழக்கு போட்ட தமிழக அரசை வன்மையாக கண்டித்தும், தெற்கு மாவட்டத்தில் உள்ள 3சட்டமன்றதொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பாடு படவேண்டும், விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பது, ஆன்லைன் மூலம் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும் என பேசினார்.மாவட்ட துணை அமைப்பாளர்கள் சாத்ராக், ஜனார்தனம், ரகுபத்மநாபன், பூங்குமார், சங்கர், மணிமாறன், பாரிகண்ணன், விஜி, ரவிச்சந்திரன், அமிர்தவள்ளி, சாக்கரடீஸ், யூனியன் கவுன்சிலரும், ஒன்றிய செயலாளருமான பாலசிங், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வக்கீல் மனோஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *