தூ.டி அரசு மருத்துவமனை உள்கட்டமைப்புகாக ரூ.50 லட்சம் நிதி : கனிமொழி கருணாநிதி எம்பி

கனிமொழி கருணாநிதி எம்பி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை இன்று ஆய்வு செய்தார்.

ஆய்வில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா சிறப்பு அவசர சிகிச்சை வார்டில் சில உள்கட்டமைப்பு மற்றும் லிப்ட் வசதி உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உடனே ரூ. ஐம்பது லட்சத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரிடம் இந்த சிறப்பு நிதியை அளிப்பதாக கனிமொழி கூறியுள்ளார்.மேலும் சட்டப்பேரவை பி. கீதாஜீவன், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா R. ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர், சப்-கலெக்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.