தமிழகம் முழுவதும் திமுக உட்கட்சி தேர்தல் தாெடக்கம்!!!

திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது  உட்கட்சி பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின்  தலைமை அறிவித்தது. இந்தத் தேர்தல் கிளை கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர மாநகரப் பகுதி, தேர்தல்கள் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை கழக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு கூடி தலைவர், பொதுச் செயலாளர், மற்றும் பொருளாளர் தணிக்கை குழு உறுப்பினர் என பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உட்கிளை நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் எம்எல்ஏ.,விண்ணப்ப படிவம் வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சண்முகையா எம்எல்ஏ., மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் என்பி.,ஜெகன், ஓட்டப்பிடாரம் யூனியன் துணை தலைவர் காசி விஸ்வநாதன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் மார்ச் 15 ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.