தி.மு.கழகத்தின் 15-வது பொதுத் தேர்தல் தலைமைக் கழகத்தால் 21.02.2020 முதல் 10.03.2020 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 27.02.2019 அன்று கழக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களின் மறைவையொட்டி ஒரு வார காலம் கழக தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த 27.02.2020 அன்று ஒன்றிய கழகங்கள் வாரியாக விண்ணப்ப படிவங்கள் கொடுக்க இயலாத கழக தோழர்களுக்கு கடைசி வாய்ப்பாக வருகிற 14.03.2020 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மாவட்ட கழக அலுவலகமான தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் வைத்து மனுக்கள் வாங்கப்படும். இந்த வாய்ப்பை கழக தோழர்கள் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டார். மேலும் 15-வது பொதுத்தேர்தலின் தொடர்ச்சியாக ஊர்க்கிளை AE உட்கிளை அமைப்பதில் ஏதேனும் குறை இருந்தால் அது குறித்து உரிய ஆதாரத்துடன் மாவட்ட கழக அலுவலகத்தில் 14.03.2020 அன்று நேரிலோ அல்லது தலைமைக் கழக பிரதிநிதியால் தலைமைக் கழகத்திற்கு தெரியப்படுத்தப்படுத்தினால் அது குறித்து உரிய தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.