தூத்துக்குடி மாவட்டம் : சர்வதேச மகளரிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண் அமைச்சுப்பணியாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப. அவர்களிடம் மகளிர் தின வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களில் கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியார்கள் என 20 பெண் அமைச்சுப்பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் நேற்றைய மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (09.03.2020) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்களை சந்தித்து மகளிர் தின வாழ்த்து பெற்றனர்.