காவல் நிலையம் மூலம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

ரூபாய் 12500/- பணத்துடன் கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து காவல் நிலையம் மூலம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கனகராஜின் நேர்மையான செயலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு‌. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

தூத்துக்குடி – ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த பாத்திமா பீவி என்பவர் ஜாகிர் ஹுசைன் நகருக்கு வந்து கொண்டிருக்கும்போது தான் வைத்திருந்த ரூபாய் 12,500/- மணி பர்ஸை தவறவிட்டுள்ளார். இந்த மணி பர்ஸை அப்பகுதியில் வந்து கொண்டிருந்த கனகராஜ் என்பவர் எடுத்து தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதனையடுத்து தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. தாமஸ் மற்றும் திரு. மகாராஜன் முன்னிலையில் கனகராஜ் மூலமாக பாத்திமா பீவி என்பவரிடம் ரூபாய் 12,500/- பணம் ஒப்படைக்கப்பட்டது.

பணத்தை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்க உதவிய கனகராஜ் என்பவரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.