அத்திமரப்பட்டி கிராம உப்பாத்து ஓடை பகுதியில் கரை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி கிராம உப்பாத்து ஓடை பகுதியில் கோரம்பள்ளம் பொதுப பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் ரூ.27 லட்சம் மதிப்பில் கரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திப் நந்தூரி, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு இன்று (08.07.2020) ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள உப்பாத்து உடையில் அதிகமான நீர் வரத்து காலங்களில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் நீர் புகா வண்ணம் உப்பாத்து ஓடையில் ரூ.27 லட்சம் மதிப்பில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கோரம்பள்ளம் டிவிசன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி அவர்களிடம் உப்பாத்து ஓடை கரை பலப்படுத்தும் பணிகளின்போது இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, அவர்கள் நேரில் அத்திமரப்பட்டி பகுதிக்கு வந்திருந்து உப்பாத்து ஓடை கரை பலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக சர்வே செய்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தால் அவைகளை அகற்றிவிட்டு கரை அமைக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் ஓடை பகுதி சர்வே செய்யப்பட்டு கரை அமைக்கும் பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.

ஆய்வின்போது தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.பிரித்திவிராஜ், இ.ஆ.ப., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நீர்வள ஆதார அமைப்பு திருமதி.பத்மா உதவி செயற்பொறியாளர்கள் திரு.மணிகண்ட ராஜா, திரு.பசுபதி கணேஷ் திரு.பாலசுப்பிரமணியன், திரு.ரத்தினகுமார் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.