கொரோனா பாதிப்பில் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சியில் கொரோனா பாதிப்பில் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ள பூபால்ராயபுரம், கிருஷ்ணராஜபுரம், போல் பேட்டை, அண்ணா நகர் உள்ளிட்ட கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் இன்று காலை 10.15 மணியளவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 903 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 628 நபர்கள் பூரணம் குணம் பெற்று வீடு திரும்பி உள்ளார்கள். 271 நபர்கள் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகிறார்கள் என ஆட்சியர் சந்தீப் நந்தூரிதெரிவித்தார்


தூத்துக்குடி பூபால்ராயபுரம் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார். மேலும் நோய் கட்டுபாட்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தெர்மல் ஸ்கிரினிங் செய்யும் பணிகளையும், வீட்டில் உள்ள பொதுமக்களுக்கு சாணிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்யும் பணிகளையும், பல்சஸ் சரிபார்க்கும் கருவி மூலம் ஆக்சிஜன் பரிசோதனை செய்யும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மேலும், மாவட்ட ஆட்சியர் நோய் கட்டுபாட்டு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் எந்த ஒரு நபரும் விடுபடாத வகையில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள நபர்களை கரோனா தொற்று மாதிரி சேகரிக்க வேண்டும் என மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 26,192 மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 903 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 628 நபர்கள் பூரணம் குணம் பெற்று வீடு திரும்பி உள்ளார்கள். 271 நபர்கள் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். 


தினம்தோறும் நமது மாவட்டத்தில் சுமார் 1,000 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சில தினங்களுக்கு முன்பாக தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் நவீன தானிங்கி RNA பிரித்தெடுக்கும் கருவி துவக்கி வைத்தார். இதன் மூலம் கொரோனா தொற்று பரிசோதனை மாதிரிகள் விரைவாக செய்ய முடியும். சளி, காய்ச்சல், இரும்பல் போன்ற அறிகுறிகள் தொடர்ச்சியாக ஏற்படுவதை தவிர்பதற்காக தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் காய்ச்சல் சிகிச்சையகம் விரைவில் துவக்கப்பட உள்ளது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சி 40 தெருக்களிலும், கோவில்பட்டி நகராட்சி உட்பட்ட 15 தெருக்களிலும் மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் சரிபார்க்கும் கருவி மூலம் ஆக்சிஜன் பரிசோதனை செய்து வருகிறார்கள். 
இதில் அதிக உடல் வெப்ப நிலை உள்ள நபர்களையும், இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களையும், ஆக்சிஜன் குறைபாடுகள் உள்ள நபர்களை கண்டறிந்து உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனை மாதரிகள் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி நகராட்சி ஏற்கனவே துவக்கப்பட்டுள்ளது. இன்று தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பூபால்ராயபுரம் பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை பணிகளை ஆய்வு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 
தூத்துக்குடி மாவட்டத்திற்கு குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலத்தில் இருந்து வருகை தந்த நபர்களில் 185 நபர்களுக்கும், சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுமார் 200 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வருகிறார்களா என்பதை கண்காணிக்க அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கொரோனா தொற்று சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக 200 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டம் முழுவதும் 1,600 படுக்கைகள் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை மட்டும் அல்லாமல் அனைத்து மருத்துவமனையும் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.   உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் துறை கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்ட வட்டாச்சியர் மற்றும் துணை வட்டாச்சியர் ஆகியோர்கள் 24 x 7 இந்த பணியில் ஈடுபட்டு உள்ளார்கள். ஈரான் நாட்டில் இருந்து சுமார் 700 மீனவர்கள் நாளை 01.07.2020 கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தர உள்ளார்கள். இதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கடலோர மாவட்டத்தை சார்ந்த பலவேறு மீனவர்கள் உள்ளார்கள். தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த உடன் உடனடியாக தெர்மல் ஸ்கிரினிங் செய்யப்படுகிறது. 
பின்னர் குடிவரவு நுழைவு மற்றும் உடமைகள் சோதனை செய்து பேருந்துகள் மூலம் அவர்களது மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழகம் மூலம் சிறப்பாக் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கொரோனா தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு வடிவமைத்த விழிப்புணர்வு மடிப்பேடுகளை வழங்கினார். ஆய்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார், சுகாதார அலுவலர் ராஜசேகர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.