கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டாம்புளி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூர் ஆகிய கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டாம்புளி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூர் ஆகிய கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நோய் கட்டுபாட்டு தடுப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளி வருவதையும், வெளியே இருந்து பொதுமக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லாமல் இருக்க ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் என அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் , கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூர் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை பார்வையிட்டு, பொதுமக்கள் முககவசங்கள் அணிந்து சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் ஆட்சியர் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் சமூக பரவால் ஏற்படாத வகையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கிடைத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்களின் முதன்மை தொடர்பாளர்கள் மற்றும் இரண்டாம் தொடர்பாளர்கள் என எந்த ஒரு நபரும் விடுபடாத வகையில் அனைவருக்கும் கொரோனா தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அனைத்து வீடுகளிலும் வழங்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய் சமூக பரவால் ஏற்படாத வகையில் அரசு தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

ஆய்வின்போது தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், துணை ஆட்சியர் சுப்புலட்சுமி, கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கோமதிராஜேந்திரன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, கருங்குளம் துணை வட்டாட்சியர் சங்கரநாராயணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பார்வதிநாதன் (செய்துங்கநல்லூர்), குமாரவேல்ஜாண்சன்துறைமணி (கூட்டாம்புளி), மருத்துவர்கள் மரு.ஜெனிபர்வித்தியா, மரு.மேரிஸ்டெல்லா, வட்டார மருத்துவ அலுவலர் விமோனிஸ், ஊராட்சி செயலர் சங்கரபாண்டியன் (செய்துங்கநல்லூர்) மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.