இன்று முதல் முக‌க்கவசம் கட்டாயம் : ஆட்சியர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக 1,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 635 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 18 ஆக உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 27 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்றுவரை கொரானா தொற்று சந்தேகத்தின் கீழ் 100 கணக்கான மக்களுக்கு பரிசோதனையும் நடைபெற்று வருகிறது.

கொரானா வைரஸ் தொற்று தடுப்பு காரணமாக மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் ஏதேனும் வேலைக்காக வெளியே செல்ல வேண்டியுள்ளது. காவல்துறை சார்பில் கண்டித்தாலும் மக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே தொற்று வைரஸில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் முக‌க்கவசம் அணிவது கட்டாயம் . முககவசம் அணியாதவர்களை தீவிரமாக கண்காணித்து எச்சரிக்கை விடப்படும். அதன் பின்னரும் முககவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.