சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு அரிசி, பருப்பு என மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று காலத்தில், சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, மே 2020 மாதத்திற்குரிய உலர் உணப்பொருட்களாக அரிசி மற்றும் பருப்பு அனைத்து பள்ளி சத்துணவு மையங்களிலும் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : சென்னை, சமூகநலம் (ம) சத்துணவுத்திட்டத்(சந4-1) துறை அரசாணை (ப) எண்.72 நாள்:02.07.2020-ன்படி, கொரோனா நோய்த் தொற்று காலத்தில், சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ மாணவியருக்கு, மே 2020 மாதத்திற்குரிய உலர் உணப்பொருட்களாக அரிசி மற்றும் பருப்பு அனைத்து பள்ளி சத்துணவு மையங்களிலும் வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியர்கள் அல்லது மாணவ/மாணவியர்களின் பெற்றோர்/பாதுகாவலர்கள் தங்களது மாணவ, மாணவியர்கள்pன் ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன், சம்பந்தப்பட்ட பள்ளி சத்துணவு மையங்களுக்கு நேரில் சென்று தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர்/ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் உலர் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றி, பள்ளி சத்துணவு மையங்களில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் 1322 பள்ளி சத்துணவு மையங்களில் 56707 துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் 33423 உயர் துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 90130 மாணவ, மாணவிகள்கள் பயன்பெற உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.