மலேசியாவில் நடைபெற்ற 21வது மூத்தோர் ஆசிய தடகள போட்டி நடைப்பெற்றது. போட்டியில் பல மாநிலங்களில் இருந்து பல வீரர்கள் கலந்துகொண்டனர். அதில் தூத்துக்குடியை சேர்ந்த பலரும் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றனர். ஆறுமுகநேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை பட்டுடால்மி, காவல்துறையை சேர்ந்த காவலர் சுப்பையா, பொன்ராஜ், பீட்டர் பாண்டியராஜ், மாணிக்கபுரம் ஆசிரியை சரோஜா கிரேஸ், உடற்கல்வி ஆசிரியை மெர்சி பத்மாவதி, மற்றும் சோழபுரம் மாலினி ஆகியோர் மூத்தோர் தடகள போட்டியில் பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றனர். வெற்றி பெற்ற அனைவரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மூத்தோர் தடகள கழக செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
