ஊர் மக்களுக்கு இலவச முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு: ராஜபாளையம்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராஜபாளையம் ஊர் மக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

26.06.2020 வெள்ளிக்கிழமை இன்று காலை 9,00 மணியளவில் இராஜபாளையம் ஊர் நிர்வாகம் சார்பில் இலவச முக கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் இராஜபாளையம் பிலோமினா மாதா ஆலயம் முன்பு நடைபெற்றது. இதில் ஊா்நிா்வாகிகள் திரு. அப்பன்ராஜ் அவர்கள், பெலிக்ஸ், துரை ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தருவைக்குளம் காமராஜா் நற்பனி மன்ற அமைப்பாளா் லாரன்ஸ் அவா்கள் மற்றும் தருவைக்குளத்தைச் சோ்ந்த சமூக ஆர்வலர் கென்னடி அவா்கள் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசத்தை பொதுமக்களுக்கு வழங்கினாா்கள். மேலும் இந்நிகழ்வில் ஆசிாியா் பாா்ஜீன் அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் இந்நிகழ்வு ஏற்பாடுகளை சமூக ஆா்வலா் தொம்மை அந்தோணி அவா்கள் செய்திருந்தார். பொதுமக்களும், பணியாற்றும் நண்பர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசம் மற்றும் கபசுரக் குடிநீரை பெற்றுச் சென்றனா்