தோனி

மனம் திறந்த தோனி

இந்திய அணியின் ஆகச்சிறந்த பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி.
இவர் களத்தில் இருக்கும் வரை எதிரணி கண்ணில் பயம் தொற்றி கொண்டு இருக்கும்.இவரை ரன் அவுட் செய்வது அவ்வளவு எளிது அல்ல.தோனியின் மீது உள்ள அந்த நம்பிக்கை தான் கடந்த ஆண்டு உலகக்கோப்பை முதல் அரை சுற்றில் இந்தியா நிச்சியம் தகுதி பெற்றுவிடும் என்ற எண்ணத்தை ரசிகர்கள் மனதில் விதைத்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூஸ்லாந்து அணி 239 ரன்கள் எடுத்தது.240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடிய இந்திய அணி நியூஸ்லாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்து தடுமாறி கொண்டு இருந்தது.இந்த தடுமாற்றத்தில் இருந்து வெளிய கொண்டு வந்தது ஜடேஜா மற்றும் தோனி கூட்டணி.
ஆனால் ஜடேஜா 77 ரன்னில் ஆட்டம் இழக்க ஒட்டுமொத்த இந்திய அணியின் ஒரே நம்பிக்கை தோனி மட்டும் தான்.49வது ஓவரில் முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடிக்க,இந்திய ரசிகர்களின் நம்பிக்கை கிட்டத்தட்ட்ட உலகக்கோப்பை அருகே சென்றுவிடத்தாக தான் சொல்ல வேண்டும்.ஓவரின் மூன்றாவது பந்தில் இரண்டாவது ரன் எடுக்கும் போது குப்திலின் அபாரமான த்ரோவால் நூலிழையில் ரன் அவுட் ஆனார் தோணி.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த ரன் அவுட் குறித்து இந்தியா டுடே பத்திரிக்கையாளரிடம் மனம் திறந்து கூறியதாக சொல்லப்படுகிறது.அதில்,தோனி கூறியதாவது,”அந்த ரன் அவுட்டின் போது தான் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று தனக்குள்ளவே கேட்டு கொண்டதாகவும்,அந்த 2 இன்ச் தூரத்தை தான் டைவ் அடித்து
கடந்து வேண்டுமென தனக்குத்தானே சொல்லி கொண்டதாக தோனி தெரிவித்தாக சொல்லப்படுகிறது.