பட்டாஸ்

ட்விட்டரில் தெறிக்கவிடும் தனுஷின் பட்டாஸ் புகைப்படங்கள்

நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான பட்டாஸ் திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளமான டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக காந்த கண்ணழகி, இளைய புன்னகை அரசி என போற்றப்படும் நடிகை ஸ்னேகா, மஹ்ரின் பிர்ஜாடா என இருவரும் நடித்தனர்.

இளம் இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன காமெடி ஆக்ஷன் காதல் என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம் தனுஷ் ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரையும் வெகுவாக சென்றடைந்துள்ளது.

-seithikkural