முதலமைச்சரின் பொது நிவாரண நிதி நன்கொடையாளர்கள் விவரங்கள்

கொரானா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளிக்கப்பட்ட நன்கொடையாளர்கள் விவரங்கள் :

மாண்புமிகு அம்மாவின் அரசு கொரானா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய் தடுப்பு பணிகளையும் நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரண பணிகளுக்கு என முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசுசார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 30.4.20 அன்றுவரை மொத்தம் 306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 558 ரூபாய் வரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மே 1 முதல் 5 வரை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மன முன்வந்து நிதி உதவி வழங்கி அவர்களின் விவரங்கள் :

  • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 20 கோடி ரூபாய்
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 5 கோடி ரூபாய்
  • எம் ஆர் எஃப் எம் டேஷன் 4 கோடி ரூபாய்
  • அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் 3 கோடியே 70 லட்சம் ரூபாய்.
  • இந்தியன் வங்கி ஒரு கோடி ரூபாய்
  • எச்.வி.எஃப் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சார்பாக 66 லட்சத்து 67 ஆயிரத்து 470 ரூபாய்
  • தமிழ்நாடு கிராம வங்கி 25 லட்சத்து 38 ஆயிரத்து 514 ரூபாய்
  • மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் 15 லட்சத்து 89 ஆயிரம் 535 ரூபாய்
  • தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை முதுநிலை பொறியாளர்கள் சங்கம் 15 லட்சத்து 78 ஆயிரத்து 708 ரூபாய்
  • மோபிஷ் இந்தியா பவுண்டேஷன் 15 லட்சம் ரூபாய்.
  • மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் 14 லட்சத்து 65 ஆயிரத்து 999 ரூபாய்
  • திருவாவடுதுறை ஆதின கர்த்தார் 12 லட்சம் ரூபாய்
  • ராயின் பத்து லட்சம் ரூபாய்
  • கோனே எலிவேட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் பத்து லட்சம் ரூபாய்
  • பிரிமியர் பைன் லைன்ஸ் பிரைவேட் லிமிடெட் பத்து லட்சம் ரூபாய்
  • Stahli இந்தியா பிரைவேட் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்
  • ஸ்ரீ சந்தான கிருஷ்ணன் சில்க்ஸ் 10 லட்சம் ரூபாய்

மேற்கண்ட ஐந்து நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 41 கோடியே 36 லட்சத்து 882 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 347 கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய் ஆகும். மேற்கண்ட நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிவாரண நிதி அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் அந்த அரசுக்கு ஆதரவளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும் சிறுக சிறுக சேமித்த பணத்தை மனமுவந்து அளித்த பொதுமக்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.

மேலும் கொரானா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஆதரவாக தங்களது ஒரு நாள் ஊதியத்தை மனமுவந்து அளித்த அனைத்து தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் , பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.