தூய மரியன்னை கல்லூரியின் சார்பாக டெங்கு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம்

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி AISHE Code: C-41151, ஆங்கிலத் துறை உன்னத் பாரத் அபியான், தருவைகுளத்தில், டெங்கு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் மிகச் சிறப்பான முறையில் 15.02.2020 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாக ஊர்மக்கள் கூறினர். மாணவியர் அனைவரும் தனிப்பட்ட முறையில் 525 குடும்பங்களைச் சந்தித்து டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர். இத்துடன் தூய மரியன்னை கல்லூரி மற்றும் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை, தூத்துக்குடி இணைந்து இலவச மருத்துவ முகாம், தூய மிக்கேல் மழலையர் பள்ளியில் நடத்தப்பட்டது. இம் மருத்துவ முகாமின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், மாணவிகளுக்கு “டெங்கு மற்றும் கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்”, தூய கத்திரினம்மாள் துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.