தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சமத்துவ மக்கள் கழகம், சமத்துவ தலைவர் அவர்களின் ஆணையின்படி கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் அவர்களை கொடூரமாக தாக்கிய காவல்துறை மீது CBI விசாரணை நடத்த கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் உள்ள சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளா் அற்புதராஜ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட அவை தலைவா் கண்டிவேல் முன்னிலை வகித்தார் மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ்குமாா் சிறப்புரையாற்றினார். மாநில தொழிற்சங்க செயலாளா் ஜெபராஜ் டேவிட் வழக்கறிஞர் அந்தோனி பிச்சை மாநில கலை இலக்கிய செயலாளா் மற்றும் திராளான சமத்துவ மக்கள் கழக உறுப்பினா்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினாா்கள்