ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சி.ஐ.டியு யுடன் இணைந்த ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க ஒன்றியத்தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

இதில் சட்டபேரவையில் முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்தப்படி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குவர்களுககு அடிபடை ஊதியம் ரூ 2500இல் இருந்து ரூ4ஆயிரம் ஆகவும், தூய்மை காலலர்களின் ஊதியம் ரூ2600இல் இருந்து ரூ3600 ஆகவும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை அரசாணையாக வெளியிட வேண்டும் .

கரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள ஊராட்சி பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலர் கு. ஜெயபால், இணைச் செயலர் முருகன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட இணைச் செயலர் அ. பாலகிருஷ்ணன், மற்றும் செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். உறுப்பினர் ஞானத்துரை நன்றி கூறினார்.