ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் : தூத்துக்குடி

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் கருப்பசாமி மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

போராட்டத்தில்

  • பஞ்சாயத்துகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
  • அனைத்து ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
  • தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
  • துப்புரவு தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
  • 7வது ஊதியக்குழு நிர்ணயம் செய்த நிலுவை தொகையை வழங்க வேண்டும்  

என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் நேருஜி வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் முனியசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து துவக்கவுரை ஆற்றினார். சிஐடியு உப்பு தொழிலாளர் சங்க தலைவர் பொன்ராஜ், தூத்துக்குடி துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க செயலாளர் காசி, ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் முருகன், மீன்பிடி தொழிலாளர் சங்க செயலாளர் சங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.