மத்திய அரசு உயர் கல்வியில் ஓபிசி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு உயர் கல்வியில் ஓபிசி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்து தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு உயர் கல்வியில் ஓபிசி இட ஒதுக்கீடு ரத்து செய்தது இதை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன் உத்தரவிட்டார் இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார் மாநில துணைச்செயலாளர் காட்மன்ட் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை இணைச் செயலாளர் விமல் வங்காளி தொடங்கி வைத்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் ராமசந்திரன் தெர்மல் ரவி கார்மேகம் முருகன் வேந்தன் அர்ஜுனன் சிறுத்தை சிவா ராஜேஷ் சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் அப்போது மத்திய அரசு ஓபிசி ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்