முற்போக்கு சிந்தனையாளர் தோழர். கோவிந்த் பன்சாரே நினைவு தினத்தை ஒட்டி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

மதவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட முற்போக்கு சிந்தனையாளர் தோழர். கோவிந்த் பன்சாரே நினைவு தினம் இன்று. அவரது நினைவு தினமான இன்று (20.02.20) தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பு மாலை 5 மணிக்கு ஜனநாயக மேடை குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை மற்றும் திருமிகு.ஷாஜகான் Ex.MC முன்னிலையில், அருட்தந்தை சுந்தரி மைந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இதில் இந்திய தேசிய காங்கிரஸ் திரு C.S முரளிதரன், திரு கே. எஸ் அர்ஜுனன் CPM, திரு.R.S ரமேஷ், திரு. புகாரி (தமிழ்நாடு தக்வா சமாத்), அருட்சகோதரி முனைவர் எழிலரசி (கலை இலக்கிய பெருமன்றம்), தோழர். S. அழகு முத்து பாண்டியன் (CPI), திரு H.M. இக்பால் (வி.சி.க) புகார், மற்றும்முத்தையாபுரம் ஜமாத் கமிட்டி உறுப்பினர் திரு. அப்துல் மஜீத் ஆகியோர் பங்கேற்றனர்.