அஇஅதிமு கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் தொடர்ந்து 25 நாட்கள் ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரண உதவி செய்து வருகிறார்.
இன்று தொடர்ந்து 27வது நாட்களாக நிவாரண பணிகளில் வெள்ளிக்கிழமை இன்று மட்டும் மொத்தம் 1125 குடும்பங்களுக்கு அஇஅதிமு கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை 10.00மணிக்கு, இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு அவர்கள் ஏற்பாட்டில் ஆட்டுப் பேட்டை பள்ளி எதிரில் உள்ள அவர்களது அலுவலகத்தில் வைத்து 50 வழக்கறிஞர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள், காய்கறிகள் ஆகிய பொருட்கள் வழங்கினார்கள்.
காலை 10.45 மணியளவில் சுந்தரராமபுரம், நடராஜபுரம், அழகேசபுரம் ஆகிய பகுதியில் உள்ள 250 குடும்பங்களுக்கும், மாலை 5.00மணியளவில் கிருஷ்ணராஜ புரம் 7வது தெருவில் வைத்து 400 குடும்பங்களுக்கும் மாலை 5.30 மணிக்கு வட்டக்கோவில் அருகில் வைத்து முத்து கிருஷ்ணா புரம், முத்துகிருஷ்ணாபுரம் தொடர்ச்சி, திரவியபுரம் 350 குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஃபோட்டோ வீடியோ அசோசியேசனை சேர்ந்த 50 உறுப்பினர்களுக்கும் அமெரிக்கன் ஆஸ்பத்திரி இதயக்கனி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்த 25 நபர்களுக்கும் அரிசி பைகளை வழங்கினார்கள்.