தோல்விகளை தோற்கடியுங்கள்!!!

இன்று பல நாடுகளையும் சுற்றி வரும் பெரும் தொழிலதிபர், பேச்சாளர்,எழுத்தாளர்,தொலைக்காட்சி தொகுப்பாளர்,சமூக சேவகர் என பன்முகங்கள் கொண்ட திரு.வி.கே.டி பாலனின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடம்.

எவ்வளவு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த மனிதனும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டால் சாதனைகள் படைக்கலாம் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்.

அந்த இளைஞரின் சொந்த ஊர் திருச்செந்தூர். மிகவும் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் மிக மிக ஏழ்மையான குடும்பம். எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க வில்லை. அந்தக் கிராமத்தில் அடிமைகளைப் போல் தொழில் செய்து வந்த முன்னோர்கள் வழியை பின்பற்ற அவருக்கு மனம் இல்லை. வேறு தொழிலும் தெரியாது. அங்கே வாழ பிடிக்காமல் வித்தவுட் டிக்கெட்டில் ரயிலில் ஏறி 1981 ஜனவரி 26-ல் சென்னை வந்து சேர்ந்தார்.

சென்னையில் யாரையும் அவருக்கு தெரியாது. பிளாட்பாரம் தான் அவரது வீடு. கையில் காசு கிடையாது. எழும்பூரில் சுற்றி உள்ள ஹோட்டல்கள் டிராவல் ஏஜென்சி களில் வேலை கேட்டார் கிடைக்கவில்லை. யாருடைய அறிமுகமாவது இல்லை என்றால் வேலை தர முடியாது என்று துரத்தி விட்டார்கள். தோல்விக்கு மேல் தோல்வி. பசியுடன் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், பிக்பாக்கெட்காரர்கள் என விளம்புநிலை மனிதர்களுடன் படுத்துக் கொண்டிருந்தார் நம்மவர். ஒருநாள் இரவு பசி மயக்கத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் படித்துக்கொண்டிருந்தபோது படாரென்று ஒரு அடி விழுந்தது. அங்கே படித்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம் சந்தேக கேஸ் போடுவதற்காக போலீசார் சுற்றி வளைத்து கொண்டிருந்தார்கள். அடுத்த ஜெயிலுக்கு போகப் போவது நிச்சயமானது. நம்மவர் சட்டென்று ஓட்டம் பிடித்தார். போலீஸ்காரர்கள் துரத்தினார். போலீஸ்காரர் நமது இளைஞரை பிடிக்க முடியவில்லை.

அவரது அந்த ஓட்டம் மவுண்ட் ரோட்டில் ஒரு இடத்தில் வந்து நின்றது. அங்கே பிளாட்பாரத்தில் சிலர் படித்துக் கொண்டிருந்தனர். நமது இளைஞரும் பாதுகாப்பாக அவர்கள் அருகிலேயே படுத்துக் கொண்டார். அசதியில் அங்கேயே தூங்கி விட்டார். விடியற்காலை நேரம் ஒருவர் நமது இளைஞரை எழுப்பினார். தம்பி ‘இந்த இடத்தை எனக்கு தாரியா பணம் தருகிறேன்’ என்றார். நம்மவருக்கு ஒன்றுமே புரியவில்லை தயக்கத்துடன் எவ்வளவு என்று கேட்டார் ‘இரண்டு ரூபாய்’ என்றால் புதியவர்.

என்ன பகுதியில் என்று நிமிர்ந்து பார்த்தால் நம்மவர். ‘அமெரிக்க துணை தூதரகம்’ என்று போடு இருந்தது. அமெரிக்கா விசாவுக்காக வருபவர்களுக்கு பிளாட்பார க்யூவில் இடம் பிடித்துக் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டதும் நம் அவருக்கு இன்ப அதிர்ச்சி. அந்த இரண்டு ரூபாய் தான் சென்னையில் அவரது முதல் வருமானம். அந்த இரண்டு ரூபாய் சாப்பாடு தான் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ருசியான சாப்பாடு.

பிளாட்பாரத்தில் இடம்பிடித்து கொடுப்பதையே தொழிலாக செய்தால் நம்மவர். சாயங்காலமே வந்து இடம் பிடித்துக் கொடுத்தார். ஆங்காங்கே துண்டு போட்டு இடம் பிடித்தார். இரண்டு ரூபாய் 4 ஆனது 4 8 ஆனது 10 ஆனது இப்படித்தான் ஆரம்பித்தது நம்மவரின் வாழ்க்கை.

டிராவல் ஏஜென்சிகளுடமிருந்து பயண டிக்கெட் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார் நம்மவர். தூதரகத்தில் வரிசையில் நின்று அவர்களிடம் பேச்சுக் கொடுத்து பயணச்சீட்டை வாங்க அவர்களை டிராவல்ஸ் அழைத்து செல்வார். தனக்கு கிடைத்த கமிஷனில் சிறிய அதை தான் எடுத்துக் கொண்டு மீதியை வாடிக்கையாளர் கையில் கொடுத்து விடுவார் இதனால் பயணிகள் நம் அவரை தேடி வர ஆரம்பித்தார்கள்.

டிராவல் ஏஜென்ட்களுக்கு நம்பிக்கையான ஊழியராகவும் பயணிகளுக்கு ஓடி ஓடி உதவும் நண்பராகவும் நம்மவர் வளர்ந்து வந்தார். அப்போது நடந்த ஒரு நெஞ்சை தொடும் சம்பவத்தை அவர் விவரிக்கிறார் கேளுங்கள் : ” 1980 களில் இலங்கைக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கப்பல் போக்குவரத்து நடந்தது. பயணிகளுக்கான விசா, பாஸ்போர்ட், டிக்கெட் போன்றவற்றை ராமேஸ்வரத்தில் சென்று கொடுக்கும் பணியை ஒரு டிராவல்ஸ் நிறுவனம் எனக்கு வழங்கியது. ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் கிளம்பினேன். ரயில் மண்டபம் ஸ்டேஷனில் நின்றுவிட்டது. வண்டியும் மேலே போகாது என்று சொல்லிவிட்டார்கள். நான் போய் அங்கு உள்ள ஏஜென்டிடம் கொடுத்தாதான் பயணிகள் கப்பல் ஏறமுடியும். விடிகாலை ஐந்து மணி ஆனது திடீரென ஒரு யோசனை வந்தது.

பாம்பன் பாலத்தில் இரண்டு பக்கமும் தண்டவாளம் இருக்கும் நடுவில் ஸ்லீப்பர் கட்டை இருக்கும். கருங்கல் ஜல்லி இருக்கும். அதில் காலை வைத்து நடந்தால் இரண்டு மணி நேரத்தில் போய்விடலாம் என்று தோன்றியது. தைரியத்தில் பையை முதுகில் சுமந்து கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பார்த்தால் உயரமான பாலத்திற்கு இடையே தூண்கள் ஸ்லீப்பர் கட்டை தண்டவாளம் எல்லாம் இருக்கிறது. ஆனால் கருங்கல் ஜல்லி இல்லை. இடைவெளி தான் இருக்கிறது. சரி ஸ்லீப்பரில் நடக்கலாம் என நினைத்து பாலம் இரண்டாக பிரியும் பகுதி வரை வந்துவிட்டேன். அதற்குமேல் ஸ்லீப்பர் கடைகளில் ஒரே கிரீஸ் கால் வலிக்கிறது. காற்று புயல் போல் வீசுகிறது. கீழேயோ அலை உயரமாக எழும்பி தண்டவாளத்தை தாக்குகிறது. உடலெல்லாம் நனைந்துவிட்டது. முதுகில் பாரம் வேறு. என்னால் நிற்கவே முடியவில்லை கொஞ்சம் சறுக்கினாலும் அவ்வளவுதான், வாழ்க்கையே முடிந்து விட்டது.

என்ன ஆனாலும் சரி என்ற உறுதியுடன் அப்படியே தண்டவாளத்தின் மீது படுத்து அதில் கைகளையும், ஸ்லீப்பரில் கால்களை வைத்து தண்டவாளத்தை பற்றிக்கொண்டு தவிழ்ந்து செல்ல ஆரம்பித்தேன்.. அப்படியே கவிழ்ந்து பாம்பன் ஸ்டேஷனுக்கு போய் சேர்ந்தேன். அங்கிருந்து பஸ் பிடித்து நான் துறைமுகம் செல்லும் போது 11 மணி 12 மணிக்கெல்லாம் கப்பல் புறப்பட்டு விடும்.

என்னைப் பார்த்ததும் எங்கள் ஏஜென்ட் ஓடி வந்தார். நான் பையை கொடுத்ததும் என்னை திரும்பிக்கூட பார்க்காமல் அங்கே காத்துக்கொண்டிருந்த அவர்களிடம் கொடுத்து கப்பலில் ஏற்றினார்கள். மச்சி ஏஜென்ட்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். நான் நடந்ததை சொன்னேன். அவர்களுக்கெல்லாம் ஆச்சரியம். என் முகவரியை கேட்டு வாங்கிக் கொண்டார்கள். எனக்கு வணிக வாய்ப்புகளை வாடி தந்தார்கள். சோதனைகள் தான் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்த நாள் அது.

நான் கற்றுக்கொண்ட அனுபவங்களை படிக்கட்டுகளாக்கி 1986 ஜனவரி 17 இல் சென்னை மண்ணடியில் தனது சொந்த நிறுவனத்தை தொடங்கினார் வி.கே.டி பாலன். 1500 ரூபாய் வாடகை உடன் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் இன்று சொந்த கட்டிடத்தில் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வணிகம் செய்யும் மாபெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளார் மதுரா டிராவல்ஸ் இப்போது IAIA Approved Travel Agency. எல்லா கன்சலேடுகளும் இந்த நிறுவனத்தை அங்கீகரித்து இருக்கிறார்கள்.

1981 இல் சென்னைக்கு ட்ரெயினில் வித்தவுட் கத்தில் வந்தார் பாலன்இன்றும் அவர் வித்தவுட் டிக்கெட் தான் ஆனால் விமானத்தில். ஆம், அவர் இன்று எந்த நகருக்கு செல்வதாக இருந்தாலும் டிக்கெட் தேவைப்படாத சிறப்பு விருந்தினராக அவரை ஏற்றி சென்று எல்லா விமானங்களும் கவுரவிக்கிறார்.

முன்னேற விரும்பும் இளைஞர்களிடம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன என்று அவரிடம் கேட்டபோது நொடியும் தயங்காமல் அவர் சொன்னார்:

” நாணயம் – நன்றி இவை இரண்டும் எனது மந்திர சொற்கள். நாணயம் என்பது ‘சொன்னதைச் செய், செய்வதைச் சொல்’. உதவி செய்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் உதவுவது மற்றொரு முக்கிய பண்பு. நாணயம், நன்றி இரண்டும் இருந்தால் தோல்விகள் எல்லாம் உங்களிடம் தோற்று ஓடிவிடும் தோல்விகளை தோற்கடியுங்கள்”.