தூத்துக்குடியில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் மரணம் – பரிசோதனையில் கொரோனா உறுதி

தூத்துக்குடி மாநகர பகுதியை சேர்ந்த 73 வயது மதிக்கத்தக்க முதியவர் நெஞ்சுவலி காரணமாகவும் மூச்சுத்திணறல் காரணமாகவும் மூன்றாம் தேதி மாலை ஐந்து முப்பது மணிக்கு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு காய்ச்சல் முன் சிகிச்சைப் பிரிவில் ரத்தக்கொதிப்பு மற்றும் நெஞ்சு வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது அவருக்கு நோய் தொற்றுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது அவர் நேற்று மாலை மூன்று முப்பது மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு மாதிரி எடுக்கப்பட்டது நோய்த்தொற்று உண்டு என்று வந்ததால் அவர்கள் உறவினர் உடைய ஒப்புதலுடன் மாநகராட்சி மூலமாக உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.