தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகேயுள்ள புல்லாவெளி கடற்கரையில் சுமார் 500கிலோ எடை கொண்ட டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதைப் பாா்த்த மீனவா்கள் மீன்வளத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் வளைகுடா தேசிய உயிரின வனத்துத்றை பாதுப்பக அதிகாரிகள் கடலில் கப்பல் மோதி காயம் அடைந்ததால் உயிரிழந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என கூறினர். மேலும் டால்பினை உடற்கூறுஆய்வு செய்து அதன் பின்னா் புதைக்கப்படும் என மீன்வளத் துறையினா் தெரிவித்தனா்.
