டிடிவி

ஹைட்ரோ கார்பன் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் டிடிவி ட்விட்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பின் படி இந்தியாவில் எங்கு ஹைட்ரோகார்பன் எடுக்க வேண்டும் என்றாலும் அதற்கு எந்த ஒரு கருத்து கேட்பு கூட்டமாக மக்கள் அனுமதி பெற வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளது. இதற்கு தற்போது தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பினை உருவாக்கி இருக்கிறது.

நேற்றைய தினம் கூட திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசு அறிவித்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார் இந்நிலையில் இன்றைய தினம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைப் பெயரளவிற்கு மட்டுமே எதிர்த்து வரும் பழனிசாமி அரசும், அதிக எம்.பிகளை வைத்திருக்கின்ற தி.மு.கவும் மத்திய அரசின் இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தேவையான முயற்சிகளை உண்மையான அக்கறையோடு மேற்கொள்ள வேண்டும் என இப்பதிவில் மூலமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

-seithikkural