லஞ்ச பணம் பெற்ற போது தாசில்தார் கைது! – சென்னை

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியத்திடம் வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்துள்ளார். அவருக்கு வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்காக மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியன், ரூ. 10,000 லஞ்சம் கேட்பதாக ரவிச்சந்திரன் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். பின்பு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் ஆலோசனையின் படி, நேற்று மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியனிடம் ரவிச்சந்திரன் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ரூ.10,000 லஞ்சம் கொடுத்தார். ரவிச்சந்திரனிடம் இருந்து லஞ்ச பணம் ரூ.10,000யை பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியனை கைது செய்தனர்.