குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா-சூரசம்கார நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி: தமிழகத்தில் தசராவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான தூத்துக்குடி மாவட்டம்
குலசேகரப்பட்டிணம் அருள்மிகு முத்தாரம்மன் கோவிலின் தசரா திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவில் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது, குலசேகரப்பட்டினம் கடற்கரைத்திடலில் முத்தாரம்மன் மகிசூரனை சம்ஹாரம் செய்யும் காட்சியை சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு களித்தனர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரப்பட்டிணத்தில் அமைந்துள்ளது அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில், தமிழகத்திலேயே தசரா திருவிழாவிற்கு மிகவும் பெயர் போன கோவில் ஆகும்; இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான
சூரசம்ஹாரம் நள்ளிரவில் வெகுவிமர்சையாக நடைபெற்றது தமிழகத்தின் மைசூர் என்றழைக்கப்படும் குலசேகரப்பட்டிணம் அருள்மிகு முத்தாரம்மன் கோவிலின் தசராதிருவிழா வேறெங்கும் காணமுடியாத புதுமையான முறையில் கொண்டப்படுகிறது பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனுக்காக விதவிதமான வேடமணிந்து ஊர் ஊராகச்சென்று காணிக்கை பெற்று முத்தாரம்மனுக்கு செலுத்துவது இந்த தசரா திருவிழாவின் சிறப்பம்சமாகும்,
தூத்துக்குடி, திருநெல்வேலி,மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து மட்டுமின்றி சென்னை மும்பை டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் ஏராளாமானவர்கள் வருகை தந்து வேடம் அணிந்து தங்களின் நேர்த்திக்கடனை செலத்தினார்கள்,
வேடமணிந்து வரும் பக்தர்கள் தனியாகவும் குழுக்களாகவும் மேள தாளத்துடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து காணிக்கைகளை செலுத்தி அம்மனை வணங்கி வழிப்பட்டனர் காளி,முருகன்,விநாயகர்,சிவன் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர் நள்ளிரவு 11மணிக்கு மேல் கோவில் பிரகரத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் அருள்மிகு முத்தாரம்மன் கடற்கரையில் எழுந்தருளினர் அப்போது
அம்மனை எதிர்த்து போரிட தயாராக வந்த மகிசூரனை அம்மன் எதிர் கொண்டு முதலில் சுய உருவில் வந்த
மகிசூரனை வதம் செய்த முத்தாரம்மன் பின்னர் சிங்க தலை அடுத்து மாட்டுத்தலை மற்றும் சேவல்
உருவில் வந்த மகிசூரனை சம்ஹாரம் செய்து அழித்தார் , அப்போது கடற்கரையில் கூடியிருந்த லட்சகணக்கான பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர் சூரசம்ஹாரம் நடைபெற்ற கடற்கரை திடல் முழுவதும் மனித தலைகளாக காணப்பட்டது, சுமார் 5 லட்சம் பக்தர்கள் இந்த சூரசமஹாரம்
நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் இதைதொடர்ந்து முத்தாரம்மன் கடற்கரை திடலில் உள்ள மேடையில் எழுந்தருளி அங்கு ஆராதனைகள் நடைபெற்றன.