3 மாதங்களுக்கு பிறகு ஓட்டல்கள் திறப்பு, சமூக இடைவெளியுடன் வாடிக்கையாளர்கள் உணவு அருந்தினர்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதையொட்டி ஓட்டல்கள், டீக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பின்னர் டீக்கடைகள், ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டது. இதையொட்டி ஓட்டல்களில் உள்ளே யாரையும் அனுமதிக்காமல் வாசலில் வாடிக்கையாளரை நிறுத்தி பார்சல் சாப்பாடு மட்டும் வழங்கினார். இந்த நிலையில் தமிழக அரசு அனுமதிப்படி நேற்று (08/06/2020) முதல் அனைத்து ஓட்டல்களும் முழுமையாக திறக்கப்பட்டன. ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் உள்ளே சென்று சமூக இடைவெளியுடன் காலை உணவு, மதியம் சாப்பாடு மற்றும் இரவு உணவு சாப்பிட்டனர்கள்