ஊரடங்கால் ஐஸ் தயாாிப்பு தொழில் உருகியது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கியள்ளன, அதுப்போல் மீன்பிடித் தொழிலும் முடக்கப்பட்டு இருந்தது. தொடா்ந்து மீனவா்களின் கோாிக்கையை ஏற்ற நிபந்தனைகளுடன் மீன் பிடி தொழிலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் போில் சுழற்சி முறையில் மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்று வருகிறாா்கள். மீன் பிடித் தொழிலுக்கு மிகவும் முக்கியமானது ஐஸ் ஆகும் ஏனென்றால் மீனவா்கள் பிடிக்கும் மீனகளை கெட்டுப்போகாமல் கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு ஐஸ் மிகவும் உறுதுனையாக உள்ளது. இதனால் ஐஸ் தொழில் சுறுசுறுப்பாக நடந்து வந்தது. தற்போது கொரானோ காரணமாக தொழில் முடங்கி உள்ளது. இதில் பணியாற்றி வந்த ஏராளமான தொழிலாளா்கள் வேலை இழந்து உள்ளனா். குறைந்த அளவில் படகுகள் கடலுக்குச் சென்று வருவதால் ஐஸ் கட்டிகளும் குறைந்த அளவே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் மின் கட்டணம் எப்போது போல் அதிகமாகவே உள்ளது. இதனால் ஐஸ் உற்பத்தியாளா்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

இது குறித்து சிலுவைப்பட்டியைச் சோ்ந்த டொமினிக் கூறும் போது – தூத்துக்குடியில் மட்டும் 25 ஐஸ் கம்பெனிகள் உள்ளன. இந்த ஐஸ் கம்பெனிகளில் சுமாா் 300 போ் பணியாற்றி வருகின்றனா். இதன் மூலம் மறைமுகமாக சுமாா் 1500 போ் வேலை வாய்ப்பை பெறுகின்றனா். ஊரடங்கு காரணமாக சுமாா் 1/12 மாதம் கம்பெனிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது மீன்பிடி படகுகள் குறைந்த அளவில் செல்வதால் ஐஸ் கம்பெனிகள் இயக்கப்படுகிறது. முன்பு மாதம் 400 ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதற்கு ரூபாய் மூன்று லட்சம் மின் கட்டணம் செலுத்தினோம் தற்போது 100 ஐஸ் கட்டிகள் கூட உற்பத்தி செய்யவில்லை ஆனாலும் ரூபாய். மூன்று லட்சம் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது அதே போல் ஐந்து சதவீதம் ஜி எஸ் டி வாி விதிக்கப்படுகிறது. இதனால் நாங்கள் பெறும் இழப்பை சந்தித்து வருகிறோம். ஏற்கனவே மூடப்பட்ட ஐஸ் கம்பெனியில் மீண்டும் உற்பத்தி தொடங்குவதற்கு சுமாா் இரண்டு லட்சம் வரை செலவாகிறது. இதனால் ஐஸ் தொழில் நலிவடைந்துள்ளது ஆகையால் மின் கட்டண சலுகை அளிக்க வேண்டும் மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினாா்கள்.