நாடெங்கும் கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த பட்டுள்ளது. இதனால் சிறு தொழில், குடிசை தொழில் என பல தொழில்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது, இதனால் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல், சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடி அமுதா நகா் 4-வது தெருவில் தனது இல்லம் அருகே மிக்சா், வருவல், காரச்சேவு ஆகியவற்றை தயாா் செய்து விற்பனை செய்து வருபவர் காமராஜ் என்பவா். இந்த ஊரடங்கு தடை உத்தரவால் தனது தொழிலில் ஏற்பட்ட சரிவு மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட விளைவுகளை பற்றி நம்மிடம் பகிர்கிறார் சிறு தொழிலாளர் காமராஜ்.
இ்ந்த கொரானோ வைரஸ் தடை உத்தரவால் தனது தொழில் மிகவும் பாதித்து உள்ளது, நான்கு ஆண்டுகளாக இந்தப்பகுதியில் தொழில் செய்து வருகிறேன் இந்த கொரானோ காரணத்தால் ஒன்னரை மாதம் தொழில் இல்லை. தொழிலை விட்டுவிட்டு வியாபாரத்திற்கு போகுற அளவுக்கு ஆயிட்டேன். முன்பு ஒரளவுக்கு சேவு, வா்வல், மிக்சா், ஆந்திரா முருக்கு என வியாபாரம் ஒடிகிட்டு இருந்திச்சு, இங்கிருருந்து புதியமுத்தூா், முள்ளக்காடு வரை சென்று விற்பனை செய்து வந்தேன் இப்போ விற்பனை சுத்தமாக கிடையாது அதனால காலையில் கொண்டு போனா பத்து மணிக்கு எல்லாம் கடையை அடைத்து விடுகிறாா்கள். அதனால் எதையும் விற்க முடியவில்லை, விற்ற சேவு, வருவலுக்கு பணம் வாங்க முடியவில்லை. எங்களுக்கு வேலை செய்ய மாஸ்டா் கோவில்பட்டியிலிருந்து வரமுடியாத காரணத்தால் பொருட்கள் தயாாிக்க முடியவில்லை அதனால் தொழில் ரொம்பவும் நலிவடைந்துவிட்டது. இப்பொழுது சேவு, மிக்சர் விற்ற நானே இப்போ ஒரு வேலை சாப்பாட்டுக்கு தா்பூசணி விற்க செல்கிறேன் என்றாா்.