ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு

இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக் கூடாது

ஜூன் 8ஆம் தேதி முதல் வழிப்பாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி

ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களையும் ஜூன் 8 முதல் திறக்க மத்திய அரசு அனுமதி

மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்

கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி

தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும்

தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், சூழலை பொறுத்து திறக்க அனுமதி

நாடு தழுவிய அளவில் குறிப்பிட்ட வகை பிரிவுகளுக்கு மட்டுமே தடை இருக்கும்

நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வும் கிடையாது

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்.