தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த 27 வயது பெண் திஷா கடந்த வியாழக்கிழமை அன்று இரவு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அந்த விசாரணையில் சாத்நகர் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் நான்கு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். பின்பு, நேற்று இரவு சட்டான்பள்ளி அருகே தப்பிச் சென்றதால், மாணவியைக் கொன்ற அதே இடத்தில் நள்ளிரவில் அந்த நான்கு குற்றவாளிகளையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டர் சம்பவம் இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போதுதான் அந்த பெண்ணின் ஆன்மா சாந்தி அடையும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
