திமுக தலைவர் ஸ்டாலின் 67வது பிறந்த நாளையொட்டிகிரிக்கெட் போட்டி : தூத்துக்குடி

தூத்துக்குடியில் திமுக தலைவர் ஸ்டாலின் 67வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம் எல் ஏ அறிவுறுத்தலின் பேரில் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் விளையாட்டு திடலில் நடைபெற்றது.

இளைஞர் அணி அமைப்பாளர்கள் மதியழகன் தலைமை வகித்தார், விளையாட்டு போட்டியை  பொதுக்குழு உறுப்பினர் என். பி ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன்,  பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட துணைசெயலாளர் ஆறுமுகம், இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதிப், மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி,

மாநகர துணை செயலாளர் கீதாமுருகேசன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன்,மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர்,தொண்டர் அணி அமைப்பாளர் ராமர்,மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர நாராயணன், திமுக நிர்வாகிகள் முத்துதுரை, பிரபாகர்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்