தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் மரியின் ஊழியர் ஆசிரியர் நண்பர்கள் அமைப்பு பூபாண்டியபுரத்தில் உள்ள கூடை மூடையும் 75 குறவர் குடும்பங்களுக்கும் தஸ்நேவிஸ் நகரில் வசிக்கும் 75 ஏழைக் குடும்பங்களுக்கும் அரிசி, காய்கறிகள், கோதுமை மாவு மற்றும் முகக் கவசங்களை 02.05.2020 அன்று வழங்கின. கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி முனைவர் லூசியா ரோஸ் கோவிட்-19 ஊரடங்கு சமயத்தில் ஏழை மக்களுக்கு உதவ ஊக்குவித்தார். மரியின் ஊழியர் ஆசிரியர் நண்பர்கள் அமைப்பின் தலைவர் முனைவர் திருமதி. சோபியா அவர்கள், அமைப்பின் மையக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மூலம் பொருளுதவி பெற்று இந்நலத்திட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மரியின் ஊழியர் ஆசிரியர் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ் அவர்களின் முயற்சியால் இந்த உதவிகள் மக்களிடம் வழங்கப்பட்டன. பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு பேராதரவு நல்கினர். மேலும் மெய்யெழுத்து அறக்கட்டளையினர் இணைந்து தஸ்நேவிஸ் நகர் மற்றும் பொன்சுப்பையா நகர் பகுதி மக்களிடம் நிவாரணப் பொருட்கள் சென்றடைய உதவினார்கள்.
