தூத்துக்குடி ராஜபாளையம் மக்களுக்கு கோவிட் – 19 நிவாரணம்: தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி எண்கள் 66,67,129 130 மற்றும் சமூக மேம்பாட்டு திட்ட குழு சார்பாக ராஜபாளையம் பகுதியில் கோவிட்-19 ஊரடங்கினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கு இன்று (15-05-2020) மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தாளமுத்து நகர் காவல்துறை ஆய்வாளர் திருமதி பிரேமா ஸ்டாலின் அவர்கள் கண்காணிப்பின் முன்னிலையில் தூய மரியன்னை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் லூசியா ரோஸ், துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் சிபானா உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், மற்றும் தாவரவியல் துறை தலைவர் முனைவர் குளோரி, காவல் துறை நண்பர்கள் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்கள். மேலும் நண்பர்கள் மற்றும் தாராள மனம் கொண்டோர் பல்வேறு இடங்களில் இருந்து உதவியுள்ளனர்.