மறு உத்தரவு வரும் வரை தூத்துக்குடியில் டீக்கடைளை மூட மாநகராட்சி உத்தரவு

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை டீக்கடைகளை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள டீ கடைகளை மூட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதால், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் டீ கடைகளில் அதிகளவில் கூட்டமாக நிற்பதாக தொடர் புகார்கள் வந்துள்ளன
இதனால் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஒலிப்பெருக்கி மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து இன்று காலை முக்கிய சாலைகளில் உள்ள டீ கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.