கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் அறிவுரையின் படி தூத்துக்குடி மாவட்ட சுகாதார டாக்டர். கிருஷ்ணா லீலை அவர்களின் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், வி.வி.டி நினைவு மேல்நிலை பள்ளியில் வில்சன் சுகாதார ஆய்வாளர் மற்றும் ராமசாமி ராஜா வட்டார சுகாதார மேற்பார்வையாளர், இவர்களின் தலைமையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு எப்படி கொரோனா வைரஸ்-யிடம் இருந்து தங்களை பாதுகாக்கும் முறை மற்றும் எப்படி கை கழுவும் முறையினை கற்று கொடுத்தனர்.

சோப்பு போட்டு கை கழுவுவது எப்படி

அவர்கள் கூறுகையில்,
1.) ஒரு நாளைக்கு 10 முதல் 15 வரை தங்கள் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.
2.) மேலும் கூட்டம் கூடும் இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் காற்றின் மூலம் பரவும் நோய் என்பதால் கீழ் கண்டவற்றை பின் பற்றுமாறு கூறினார்கள்.

இவ்விழிப்புணர்வு முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர் A. மிக்கேல் அருள் ஸ்டாலின் அவர்களும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.