மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி : திருச்சி

மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலிருந்து விமானத்தின் மூலம் திருச்சிக்கு வந்தவர்களுக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 11 மாத குழந்தை உள்பட மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் சென்னை, திருச்சி, கோவை என விமானத்தின் மூலம் தமிழகத்திற்கு வந்த 96,729 பேர் சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.