மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திலுள்ள T.சவேரியார்புரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று

மாப்பிள்ளையூரணி கிராமம், 7/110, டி.சவேரியார்புரம் என்ற முகவரியில் வசித்து வரும்,அந்தோணி பால்ராஜ் என்பவரது வீட்டிற்கு,அவரது மருமகன் அந்தோனி விமல் வயது-29 என்பவர் 12-06-2020 அன்று சென்னை பழைய வண்ணார்பேட்டை பகுதியிலிருந்து வந்துள்ளார்.மேற்படி அந்தோணி விமல் என்பவருக்கு இன்று (15-06-2020) கொராணா தொற்று உறுதியாகி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இது தொடர்பாக மாப்பிள்ளையூரணி சுகாதார ஆய்வாளர் அவர்கள் விசாரணை செய்து மேற்படி வீட்டில் வசித்து வரும் 6 நபர்களுக்கு தொற்று பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்து வருகிறார் . கிராம நிருவாக அலுவலர், மாப்பிள்ளையூரணி.