ஒரே நாளில் 11 நபருக்கு கொரோனா தொற்று உறுதி: மாப்பிளையூரணி ஊராட்சி

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று மட்டும் ஒரே நாளில் 11 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஜாஹீர் உசேன் நகர் 4 நபர், இருதயமாள் நகர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபருக்கு, ஆரோக்கியபுரத்தில் 2 பேர் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, மாப்பிளையூரணி ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதரத்துறை ஆய்வாளர் வில்சன் அவர்களின் தலமையில் தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் மக்கள் செல்வதற்கு தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.