விளாத்திகுளம் மெட்ராஸ் சலூன் கடையில் பணிபுரிந்த தொழிலாளருக்கு கொரோனா தொற்று உறுதி எதிரொலி

விளாத்திகுளம் மெட்ராஸ் சலூன் கடையில் பணிபுரிந்த தொழிலாளருக்கு கொரோனா தொற்று உறுதி எதிரொலி – கடைக்குச் சென்றவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் மாடியில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் சலூன் கடையில் பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 5 ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை சலூன் கடைக்கு சென்றவர்கள் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். அதற்கான தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

1 ஆறுமுகம் – கிராம நிர்வாக அலுவலர்

-95786 70748

2.முனியாண்டி – வருவாய் ஆய்வாளர் –

– 94420 76191

3. முத்துக்குமார் – சுகாதார ஆய்வாளர்

– 63814 18122