துக்க நிகழ்ச்சி்க்கு சென்று வந்தவருக்கு கொரோனா- தூத்துக்குடியில் முக்கிய சாலை மூடல்

சென்னையில் துக்க நிகழ்ச்சி்க்கு சென்று வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தூத்துக்குடி குமாரர் தெருவை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த தெரு உட்பட தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவின் ஒரு பகுதியும் அடைக்கப்பட்டு
தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் சமீபத்தில் சென்னையில் துக்க நிகழ்ச்சி்க்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. கடுமையான காய்ச்சல் காரணமாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குமாரர் தெரு, தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவின் ஒரு பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.