கோவில்பட்டி நீதிமன்றத்தில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்!!

கோவில்பட்டி நீதிமன்றத்தில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
நடைபெற்றது.

கோவில்பட்டி வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான அகிலாதேவி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஹோமியோபதி மருத்துவர் வடாவ்கர்பீனா கலந்து கொண்டு,

கொரோனா நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோ மருந்துகளை (ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி) உட்கொள்ள வேண்டும் என்றும், உட்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் பேசினார்.

தொடர்ந்து, முகக்கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார அறிவுரைகளையும் மருத்துவர் வழங்கினார். தொடர்ந்து, முகாமில் பங்கேற்ற நீதிபதி அகிலாதேவி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும் ஹோமியோ மருந்து,

அதை உட்கொள்ளும் வழிமுறைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை விநியோகித்தார். ஏற்பாடுகளை கோவில்பட்டி வட்ட சட்டப் பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.